பி.என்.புதூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்; வே.கௌதம்குமார் நினைவஞ்சலி

கோவை பி.என்.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 22-ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது.


Coimbatore: கோவை மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள பி.என்.புதூரில் விடுதலைப் போராட்ட மாவீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95-வது நினைவு நாளும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவராக பணியாற்றிய வே.கௌதம்குமாரின் முதலாமாண்டு நினைவு நாளும் சனிக்கிழமை (மார்ச் 22) சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவஞ்சலி நிகழ்வில், விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.







நிகழ்ச்சிக்கு பி.என்.புதூர் கிளையைச் சேர்ந்த விதாத் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான K.சாந்தி, மண்டல செயலாளர் N.சந்திரன், AIYF மண்டல தலைவர் புஷ்பராஜ், மாதர் சங்க மண்டல செயலாளர் செல்வி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.







அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக பணியாற்றிய தோழர் வே.கௌதம்குமார் 2024-ஆம் ஆண்டு சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். சிகிச்சையில் இருந்தபோதிலும் பலனளிக்காததால் மார்ச் 22-ல் அகால மரணமடைந்தார்.







விடுதலைப் போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த நாளில் பிறந்து, அதே மாவீரன் தூக்கிலிடப்பட்ட நாளில் உயிரிழந்த தோழர் கௌதம்குமார், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கிய அவரது தியாக உணர்வு பலரை உந்துதல் அளித்துள்ளது.

1931-ஆம் ஆண்டு மார்ச் 23-ல் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக திகழ்ந்த இவர்களின் தியாகம் இன்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...