ஏடிஎம்-யில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம்! - வாபஸ் பெறுமா எஸ்பிஐ?

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து கணக்கில் உள்ள பணத்தை மீட்க நாடு முழுவதும் ஏடிஎம்-களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் முதல் வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்புகளும் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டிருக்கிறது. இதன் அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கிக் கணக்கில் கட்டாயம் 5 ஆயிரம் ரூபாய் வரை பேலன்ஸ் இருக்க வேண்டும் என அறிவித்தது.

இந்நிலையில், ஜூன் 1-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. அத்துடன் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றினாலும் கட்டணம் வசூலிப்போம் என்று கூறியுள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.

இந்த அறிவிப்புகள் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்களில் நீண்ட கியூ வரிசையில் மக்கள் இன்றே நிற்க தொடங்கி விட்டனர்.

இதனிடையே இந்த சுற்றறிக்கையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியான தகவல் வெளியாகாததால் குழப்பம் நீடித்து வருகிறது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...