அருந்ததியினருக்கான பாதை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கோவை மாவட்டம் செங்கத்துறை பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையை மற்றொரு பிரிவினர் ஆக்கிரமித்ததை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள செங்கத்துறை பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலம், அம்மனை ஊர்வலமாக எடுத்து செல்லும் பாதை உள்ளிட்ட நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மாரியம்மனை ஊர்வலமாக எடுத்து செல்லும் போது, பழனிச்சாமி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தியதாகவும், இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்ககோரி, அப்பகுதி பொதுமக்கள், தீண்டாமை ஒழிப்பு முண்னனி, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்பினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பழனிச்சாமி என்பவர் மாரியம்மம் கோவில் நிலம், அரசு புறம்போக்கு நிலம் உள்ளிட்ட 10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், மாரியம்மனை எடுத்து சென்ற போது தடுத்து நிறுத்தி சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டுமெனவும், அருந்ததிய மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டுமெனவும், பழனிச்சாமி உள்ளிட்டவர்களை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...