மதுபானக் கடை குறித்து நடவக்கை எடுக்கத்தவறிய ஆட்சியரைக் கண்டித்து வீரகேரளம் பொதுமக்கள் சாலை மறியல்

மதுபானக் கடையை 15 நாட்களுக்குள் அகற்றித் தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்து ஒரு மாதமாகியும் மூடப்படாததால் வீரகேரளம் பொதுமக்கள் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்றம், நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் உள்ள மதுபான கடையை அகற்ற உத்திரவிட்டும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மதுபானக் கடைகள் செயல்பட்டுக் கொண்ணடே வருகிறது. அதனை எதிர்த்து பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகதியாக வீரகேரளம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி இரண்டுமுறை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தும் பயனில்லாததால் அப்பகுதி பொதுமக்கள் வீரகேரளம்- வேடபட்டி சாலையில் மதுபானக் கடை எண் 8465 முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, பதினைந்து நாட்களுக்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தும் இதுவரை செயல்படுத்தவில்லை என்பதால் பொதுமக்கள் மூடப்பட்டிருந்த கடை மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதுபான கடையால் பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நம்பர் லாட்டரியும் கடையருகே செயல்படுவதாகவும், குடிமகன்கள் பெண்களைப்பார்த்து தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர்.

அரசு அதிகாரிகள் கடை செயல்படாது என எழுத்துப்பூர்மாக எழுதிக்கொடுத்தும் செயல்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடையை தீயிட்டு கொளுத்தப்போவதாக காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய காவல்துறையினர் கடை இனிமேல் செயல்படாது என உறுதியளித்த பின்பு பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திரும்ப கடை செயல்படத் துவங்கினால் கட்டாயம் எரிக்க தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...