கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளில் கைத்தறி, விசைத்தறி, நூல் உற்பத்தி உள்ளிட்ட ஏராளமான ஜவுளி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், இப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ விஜய பாலாஜிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாநில செயலாளர் கந்தவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“தமிழகத்தில் 1.60 லட்சம் மின் இணைப்புகள் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள், ஒரு லட்சத்திற்கும் குறைவான கைத்தறிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 2 கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு அமைச்சர் நியமிக்கும்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ விஜய பாலாஜியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக நியமித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்கிறது. மேலும், கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய அமைச்சராக பொறுப்பேற்ற விஜய பாலாஜியை சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். அப்போது ஜவுளித்துறை வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்” என தெரிவித்துள்ளனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...