கோவை நீதிமன்ற வளாகத்தில் நாய் துரத்தியதால் சுவரேறி குதித்த வடமாநில வாலிபர் பலி

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சி.சி.டி.வி. காட்சிகளில், நாய் துரத்தியதால் நீதிமன்ற சுவரேறி உள்ளே குதித்த அவர், இருட்டில் தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை கோபாலபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றிய ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றத்திற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இருந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள், நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த மருத்துவக் குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீதிமன்ற வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், இன்று அதிகாலை அந்த வாலிபர் கோபாலபுரம் பகுதியில் நடந்து சென்றபோது நாய் ஒன்று அவரை துரத்தியது தெரியவந்தது. நாயிடமிருந்து தப்பிக்க அவர் நீதிமன்ற வளாகத்தின் பின்புற காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளார்.

அதன்பிறகும் பதற்றத்தில் வேகமாக ஓடியபோது, இருட்டில் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வாலிபரின் சட்டைப் பையில் ரூ.250 மட்டும் இருந்ததாகவும், அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவரது தோற்றத்தை வைத்து அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், கோவையில் எங்கு தங்கி வேலை பார்த்து வந்தார் என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...