கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை மேலாண்மை, சாலை சுத்தம் ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று பல்வேறு மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.






முதலில், ராஜகோபால் லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் சிங்காநல்லூர் கூட்டுறவு நியாய விலை கடையை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு அவர் பொதுமக்களிடம் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சரியாக கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். இதில் நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






இதைத் தொடர்ந்து, ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் ஏபிசி மெட்ரிகுலேஷன் பள்ளி முன்பு சாலையோரத்தில் செடிகள் குப்பைகள் சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜூன் 4ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதால், சுத்தம் செய்யப்பட்ட செடிகள் குப்பைகள் உடனடியாக எடுத்துச் செல்லுமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் உத்தரவிட்டார்.






அதைத் தொடர்ந்து, என் ஜிஆர் வீதி மற்றும் இஎஸ்ஐ காம்பவுண்ட் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். சிறிய சாலையாக உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சுத்தம் செய்யப்பட்ட சாக்கடை மண்கள் இரண்டு நாட்களுக்குள் எடுத்துச் செல்லுமாறு வார்டு சூப்பர்வைசரிடம் கவுன்சிலர் கூறினார்.






கள்ளிமேடு வீதி பகுதியில், தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்று கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து தரும்படி அறிவுறுத்தினார்.






இறுதியாக, பி ஆர் பி கார்டன் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யும் பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குப்பைகள் போட வேண்டாம் என பிளக்ஸ் வைக்குமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் கவுன்சிலர் அறிவுறுத்தினார்.


Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...