ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன் குறைந்துள்ளது. இதனுடன் பருவமழையால் காய்கறி ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், மாதாந்திர சரக்கு கையாளுதல் அளவு சுமார் 70 டன்களிலிருந்து 50 டன்களாக சரிந்துள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கோவை: ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலியாக விமானங்கள் வழக்கத்தை விட அதிக எரிபொருளை சுமந்து செல்வதால், கோவை சர்வதேச விமான நிலையத்தில் கோவை–ஷார்ஜா இடையிலான விமான சரக்கு கையாளுதல் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு சர்வதேச விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக கோவை–ஷார்ஜா வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகிறது. மேலும், பருவமழை காரணமாக காய்கறி ஏற்றுமதியும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், ஏர் அரேபியா நிறுவனம் தற்போது கோவை மற்றும் ஷார்ஜா இடையே வாரத்திற்கு ஐந்து விமானங்களை இயக்கி வருகிறது. வழக்கமாக இந்த வழித்தடத்தில் மாதந்தோறும் 65 முதல் 70 டன் வரையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன.

ஆனால், ஈரான்-இஸ்ரேல் போர் சூழல் காரணமாக ஷார்ஜா விமான நிலையத்தில் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டாலோ அல்லது மாற்று தரையிறக்கம் தேவைப்பட்டாலோ அதை சமாளிக்கும் வகையில் விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கோவை–ஷார்ஜா விமானங்களில் குறைந்தபட்சம் 2 டன் அல்லது அதற்கு மேற்பட்ட சரக்குகள் முன்பதிவு செய்யப்பட்டு ஏற்றப்படும். ஆனால் தற்போது கூடுதல் எரிபொருள் ஏற்றப்படுவதால், ஒரு விமானத்திற்கு 1 முதல் 1.5 டன் சரக்கு மட்டுமே ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது.

இதனுடன், பருவமழை காரணமாக காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளதால் ஏற்றுமதி சரக்குகளின் அளவு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு காரணங்களாலும், கோவை–ஷார்ஜா இடையிலான மாதாந்திர சரக்கு கையாளுதல் அளவு சுமார் 70 டன்களிலிருந்து 50 டன்களாகக் குறைந்துள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...