கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், எரியாத விளக்குகளை கண்டறிந்து உடனடி சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


Coimbatore:

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் அமைந்துள்ள தெருவிளக்குகளின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் தற்போது சுமார் 1,03,755 தெருவிளக்குகள் உள்ள நிலையில், அவை முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்.



மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், மாநகர தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், வரி வசூல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் நேற்று இரவு 100 சதவீத ஆய்வை மேற்கொண்டனர்.



ஆய்வின் போது எரியாத தெருவிளக்குகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை உடனடியாக சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக, மரக்கடை சாலை, மில் ரோடு, பூமார்க்கெட், சுக்கிரவார்பேட்டை மற்றும் காந்திபார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளின் நிலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...