‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசியபோது அரசியல் கட்சிகள் ஒரு என்.ஆர்.ஐ.யின் பின்னால் செல்வது போல் தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை என்று தெரிவித்தார்.


திருப்பூர்: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள புகழ்பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.



துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு பாரம்பரிய முறைப்படி பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து, பரிவட்டம் கட்டி கவுரவிக்கப்பட்ட அவர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்திய சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனையில் பங்கேற்று தரிசனம் செய்தார். பின்னர் கோயில் நினைவுப் பரிசுகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.



அதனைத் தொடர்ந்து கோயிலின் உள் பிரகாரங்கள் மற்றும் வளாகத்தை பார்வையிட்ட துணை ஜனாதிபதி, கோயிலின் வரலாறு குறித்து ஆளுநருக்கு விளக்கமளித்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்தார். பொதுமக்கள் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்த, அவர் புன்னகையுடன் வாழ்த்து தெரிவித்து சிறிது நேரம் உரையாடினார். பின்னர் கோயிலுக்கு அருகிலுள்ள திருக்குளத்தையும் பார்வையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், “அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில். சிறுவயதில் இந்தக் கோயிலுக்கு வந்தபோது இங்குள்ள குளத்தில் குளித்திருக்கிறேன். அப்போது குளத்தில் மூழ்கிய என்னை அங்கிருந்த பெரியவர் ஒருவர் காப்பாற்றினார்,” என்று தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.



தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இத்தனை அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கும்போது, ஒரு என்.ஆர்.ஐ. திடீர் ஞானோதயம் வந்தது போல ஒரு கருத்தை கூறுகிறார். அவர் பின்னால் அனைத்து அரசியல் கட்சிகளும் செல்வது போல தோற்றம் ஏற்படுவது விந்தையாக உள்ளது. இதைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை.

அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்து அரசியலை முன்னின்று நடத்த வேண்டும். அந்த வகையில், ஒரு என்.ஆர்.ஐ.யின் பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாக இல்லை,” என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...