கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்கு மற்றும் மத்திய மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் மத்திய மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத், ஆகியோர், இன்று (28.07.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24க்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில், இலட்சுமி நகர் முதல் கொடிசியா சாலை வரை இணைப்புச் சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்தும், வார்டு எண்.59-க்குட்பட்ட சிங்காநல்லூர், கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்தும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.



அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மத்திய மண்டலம் வார்டு எண். 62க்கு உட்பட்ட சாரமேடு, நஞ்சுண்டாபுரம் சாலை விரிவாக்க பணிகள் தொடர்பாக பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

இவ்வாய்வுகளின் போது, கணக்குகள் குழுத்தலைவர் தீபா தளபதி இளங்கோ, நகரமைப்பு அலுவலர் தாமோதரன், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன் (பொ), சரவணக்குமார் (பொ), மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி நகர திட்டமிடுநர் சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலர்கள் சந்திரன், குணசேகரன், உதவி பொறியாளர்கள் ஃபர்மான் அலி, கமலக்கண்ணன், சுந்தர்ராஜன், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...