வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி தி.மு.க பெண் கவுன்சிலர் திவ்யா துரைசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

கோவை: கோவை அடுத்த பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி தி.மு.க பெண் கவுன்சிலர் திவ்யா துரைசாமி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்க பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி பிரசாந்த், செயல் அலுவலர் சீமா மற்றும் கவுன்சிலர்கள் வந்திருந்த நிலையில், கூட்டம் தொடங்கவிருந்தபோது வார்டு 3 கவுன்சிலர் திவ்யா துரைசாமி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்.



தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வாசகங்கள் இடம்பெற்ற பதாகையையும் காட்சிப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா துரைசாமி, தென்கரை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்தே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.



தொடர்ந்து பேசிய அவர், தனது வார்டில் தூய்மைப் பணிகள் மற்றும் அடிப்படை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் தொடர்ந்து தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மற்ற வார்டுகளுக்கான வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தனது வார்டு எண் 3-க்கு ஒதுக்கப்பட்ட பணிகள் மட்டும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தனது வார்டுக்கு உட்பட்ட மயானப் பகுதியில் 15 வார்டுகளில் இருந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகவும், அவற்றை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். மயானத்தில் உள்ள ஏரி மேடை கடந்த எட்டு மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அங்கு உடல்களை தகனம் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும், உதவி இயக்குநரின் (AD) அனுமதி தேவைப்படுவதாகக் கூறி நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வராமலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும், வரவு-செலவுக் கணக்குகள் குறித்த விவரங்கள் கவுன்சிலர்களுடன் பகிரப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, தி.மு.க மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் கவுன்சிலர் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

இதற்கிடையில், போதிய எண்ணிக்கையிலான கவுன்சிலர்கள் வராததால், பேரூராட்சி மன்றக் கூட்டம் முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே நிறைவடைந்தது.

Newsletter

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...

Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims

Coimbatore City Police have introduced the Family Liaison Police Officer (FLPO) system to ensure continuous communicatio...

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...