ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.


Coimbatore: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவு எண். 3-ல் மேம்பாலம் அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி, பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் சார்பாக இந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பாலம் கட்டுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் V. தெய்வேந்திரன் தலைமையில், சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் V. சொக்கலிங்கம், செயலாளர் S. சுப்பிரமணியன் ஆகியோரின் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒண்டிப்புதூர் தபால் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி, முதலமைச்சருக்கு கோரிக்கை தபால்களை அனுப்பினர். பொதுமக்களின் நலன், போக்குவரத்து நெரிசலுக்கான நிரந்தரத் தீர்வு மற்றும் நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த மேம்பாலம் அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் அமைக்க மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பகுதி பொதுமக்கள் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

இப்பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் அன்றாட பயண சிரமங்களை கருத்தில் கொண்டு, உடனடியாக மேம்பாலம் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...