கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்துறையினர் விசாரணைக்காக பிடித்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் கண்டு பிடிப்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் விசாரணைக்காக பிடித்துள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வமான அறிக்கையில், ஒத்தக்கால்மண்டபம், பூங்கா நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வரும் இளவரசன் (18) என்பவர் தனது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

கடந்த 10.08.2026 அன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஒரு கும்பல் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை மிரட்டி தாக்கியதுடன், செல்போன் ஒன்றையும் எடுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இளவரசன் அளித்த புகாரின் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் குற்ற எண் 309/2026-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், கல்லூரி மாணவரான அமுதன் (19) என்பவரும் அச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் என தெரியவந்தது. இந்நிலையில், அதே நாள் காலை சுமார் 8.30 மணியளவில் அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) என்பவரும் மலுமிச்சம்பட்டி அருகே தங்களது கல்லூரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலையில் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்புடன் தொடர்புடைய சிலர், அமுதனை அச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவராக அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அமுதன் மற்றும் ஸ்ரீமனை வழிமறித்த அவர்கள், இருவரையும் ஹிந்துஸ்தான் கல்லூரியின் பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் அமுதன் சுமார் காலை 10 மணியளவில் தனது அறைக்குத் திரும்பியுள்ளார். பின்னர், மதியம் சுமார் 3 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையின்போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீமன் அளித்த புகாரின் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் விசாரணைக்காக பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் கண்டு பிடிப்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், அமுதன் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல், அன்று அதிகாலை பூங்கா நகர் பகுதியில் நடைபெற்ற முந்தைய தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகவும், அந்தச் சம்பவத்தில் அமுதனுக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பின் காரணமாகவும் நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும், அமுதன் கடந்த மாதம் கல்லூரி விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரி விடுதியில் பணியாற்றிய சமையலர் ஒருவரை அமுதன் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவரை விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...