பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை மாவட்ட காவல்துறையின் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 21 வயதான மாதேஷை கிணத்துக்கடவு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பொது அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாகக் கருதி, மாதேஷை குண்டர் சட்டத்தில் காவலில் வைக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், மாதேஷை குண்டர் சட்டத்தில் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்தக் கொலை வழக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றொரு சம்பவமாக, அஸ்வின் கொலை செய்யப்பட்ட பிறகு, அவரது உடலுடன் மாதேஷ் மற்றும் வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவன் செல்ஃபி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.