கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக 9 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: போலி இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், செட்டில்மென்ட் பத்திரம், விடுதலைப் பத்திரம், விற்பனை ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்து, சுமார் ரூ.32 கோடி மதிப்பிலான நிலங்களை போலியாக பத்திரப் பதிவு செய்து அபகரிக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 9 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த விஜயசேகர் (73), தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கோவை பீளமேடு அடுத்த மசக்காளிபாளையம், காந்தி நகர் பகுதியில் கடந்த 1991-ஆம் ஆண்டு வாங்கிய 20 சென்ட் காலி மனை உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் விஜயசேகருக்குச் சொந்தமான நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகள் மர்ம நபர்களால் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து 10-க்கும் மேற்பட்டோர் அந்த நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர், நிலத்தின் உரிமையாளரான விஜயசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடுமலைப்பேட்டையில் இருந்து கோவைக்கு வந்த விஜயசேகர், தனது நிலத்தில் கூடாரங்கள் அமைத்து சிலர் தங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விஜயசேகரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது நிலத்தின் உரிமை தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்த விஜயசேகருக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அவரது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் போலியான இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், செட்டில்மென்ட் பத்திரம், விடுதலைப் பத்திரம் மற்றும் விற்பனை ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயசேகர் சிங்காநல்லூர் சார் பதிவாளர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், நான்கு பேரின் பெயர்களில் போலியான இறப்பு சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தி சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் செட்டில்மென்ட் பத்திரம், விடுதலைப் பத்திரம் மற்றும் விற்பனை ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும், விஜயசேகருக்குச் சொந்தமான நிலத்திற்கு அருகில் உள்ள மேலும் நான்கு பேரின் நிலங்களையும் சேர்த்து, மொத்தம் சுமார் ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக பேச்சியம்மாள், மாரிமுத்து, ஜெகதீசன், சுலோச்சனா, ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, மணி, கவிதா மற்றும் சுப்புலட்சுமி உள்ளிட்ட 9 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் 336(2), 336(3), 337, 318(4), 61(2)(B) ஆகிய BNS பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய 9 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். போலி இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்ட விதம், பத்திரப் பதிவுகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள், இதில் தொடர்புடைய மேலும் நபர்கள் மற்றும் சொத்துக்களை அபகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...