கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை பிடித்து விசாரித்ததில் கொலைக்கான காரணம் தெரியவந்ததாக தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்கல் தோட்டம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி (58), வீட்டு வேலை மற்றும் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ராஜா (35) என்ற மகனும், அமுதா (30) என்ற மகளும் உள்ளனர். அமுதா குடும்பத்துடன் பாலக்காட்டில் வசித்து வரும் நிலையில், ராஜா தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 11-ம் தேதி வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்த சாந்தி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு வீடு திரும்பிய ராஜா, தனது தாயார் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். குற்றவாளியை கண்டறிய காவல் ஆணையர் உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும், சாந்தியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, அதே பகுதியில் உள்ளகடையில் பதிவான சிசிடிவி காட்சிகளில், சம்பவத்தன்று சாந்தியின் கைப்பையுடன் ஒருவர் நடமாடுவது தெரியவந்தது. இந்த முக்கிய தடயத்தின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் 17 வயது சிறுவன் என்பதும் சாந்தியின் செல்போனை அச்சிறுவன் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சிறுவனை மடக்கிப் பிடித்துக் விசாரணை மேற்கொண்டதில், சாந்தியைகட்டையால் தாக்கிப் படுகொலை செய்ததைச் சிறுவன் ஒப்புக்கொண்டான் என்று கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பின்னர் சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா, சிறுவன் சம்பவ இடத்திற்குச் சென்றதற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...

Coimbatore Police Introduce Family Liaison Officers to Assist Crime Victims

Coimbatore City Police have introduced the Family Liaison Police Officer (FLPO) system to ensure continuous communicatio...

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...