கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்ட 193 பேருக்கு பாராட்டு வழங்கினார். டெங்கு தடுப்பு போட்டியில் 11.84 லட்சம் களன்களை அகற்றிய கிழக்கு மண்டலம் வெற்றி பெற்றது.


Coimbatore:

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மேயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 48 பேருக்கு தலா ரூ.2,000 வெகுமதியுடன் பாராட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாகப் பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 132 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



மாநகராட்சி பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவ, மாணவியர்களுக்கும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 5 மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 193 பேர் பாராட்டப்பட்டனர்.



மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் ஆகஸ்ட் 3 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்ற Dengue Prevention League போட்டியில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 11,84,259 களன்களை சேகரித்து அகற்றிய கிழக்கு மண்டலம் முதலிடம் பிடித்தது. அந்த மண்டலத்திற்கு மேயர் வெற்றிக் கோப்பையை வழங்கினார். மேற்கு மண்டலத்திற்கு இரண்டாம் பரிசுக்கான கோப்பையும் வழங்கப்பட்டது.



2024-25 முதல் 2026-27 வரையிலான அரையாண்டு சொத்து வரியை நிலுவை மற்றும் அபராதம் இல்லாமல் முறையாக செலுத்திய தி யுனைடெட் நீலகிரி டீ எஸ்டேட் லிமிடெட், எஸ்.எம்.டபிள்யூ லிமிடெட், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் (டி-மார்ட்), ராம்குமார் கிரி மற்றும் சுகுணா பொறியியல் கல்லூரி ஆகியோருக்கும் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



விழாவுக்கு முன்னதாக செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உருவாக்கிய சோலார் சிஸ்டம், ராக்கெட் மாடல், மூன் காலனி, வாட்டர் ராக்கெட் உள்ளிட்ட 13 வகையான அறிவியல் கண்காட்சிகளை மேயர் பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டினார்.

தொடர்ந்து, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணபதி இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் இராமநாதபுரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் NCC மற்றும் BAND நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, நிதிக்குழுத் தலைவர் வி.ப.முபசீரா, கணக்குகள் குழுத் தலைவர் தீபா தளபதி இளங்கோ, நகரமைப்புக் குழுத் தலைவர் சோமு (எ) சந்தோஷ், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் சா.குமார ராஜபாண்டியன், மாநகர நல அலுவலர் மருத்துவர் சுபாஷ்காந்தி, நகரமைப்பு அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...