கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந்துள்ளது. கணக்கெடுப்பாளர்கள் வராத வீடுகளுக்கு மண்டல வாரியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.


Coimbatore: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டுப் பட்டியல் பணிகள் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 1 முதல் தொடங்கிய இப்பணிகள், ஆகஸ்ட் 17 வரை 61 சதவீதம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இரு கட்டங்களாக நடைபெறும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (House Listing Census) பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 39 சதவீத பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுவரை கணக்கெடுப்பாளர்கள் (HLO) வராத வீடுகள் அல்லது விடுபட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்குரிய மாநகராட்சி மண்டல அலுவலக அதிகாரிகளை (Zone Nodal Officers) தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.


மேற்கு மண்டலத்திற்கு (West Zone) தொலைபேசி எண் 0422-2551700, கைபேசி எண் 7395922972, மத்திய மண்டலத்திற்கு (Central Zone) தொலைபேசி எண் 0422-4709525, கைபேசி எண் 7871981000, வடக்கு மண்டலத்திற்கு (North Zone) தொலைபேசி எண் 0422-2243133, கைபேசி எண் 9943535360, கிழக்கு மண்டலத்திற்கு (East Zone) தொலைபேசி எண் 0422-2577217, கைபேசி எண் 8925975839, தெற்கு மண்டலத்திற்கு (South Zone) தொலைபேசி எண் 0422-2252705, கைபேசி எண் 8925975904 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.


கணக்கெடுப்பு அலுவலர்கள் அனைவரும் மாநகராட்சி வழங்கிய அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை (Identity Card) அணிந்திருப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டின் முகவரி, சுவர்களின் தன்மை, கூரை வகை, குடிநீர் ஆதாரம், கழிப்பறை வசதி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற முதற்கட்ட விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


சேகரிக்கப்படும் தகவல்கள் முற்றிலும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாநகராட்சி உறுதியளித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கோவை மாநகர மேம்பாட்டுத் திட்டங்களைச் சரியாகத் திட்டமிடவே இத்தரவுகள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் விளக்கினர்.


பொதுமக்கள், கணக்கெடுப்பு அலுவலர்கள் (Enumerators / Supervisors) தங்கள் இல்லங்களுக்கு வரும்போது, அவர்கள் கேட்கும் விவரங்களைச் சரியாக வழங்கி, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு நகர மேம்பாட்டுக்கு அடிப்படையாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...