கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பாலம், செயற்கை புல் மைதானம், ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மழைநீர் வடிகால் பணிகளும் பார்வையிடப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.



வார்டு எண் 29-க்கு உட்பட்ட மகாத்மா காந்தி நகர் - மருதம் நகர் பகுதியில் இணைப்பு பாலம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கணபதி பிட்டி காலனி பகுதியில் செயற்கை புல் தரை மைதானம் அமைக்கும் பணிகள் பரிசீலிக்கப்பட்டன. கணபதி கார்டன் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு சுகாதார மையம் வளாகத்தில் ஆய்வகம் அமைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மத்திய மண்டலம் வார்டு எண் 63-க்கு உட்பட்ட திருச்சி பிரதான சாலையில் உள்ள நகர்ப்புற சுகாதார மையம் அருகில் மாநகராட்சி இடத்தில் மரக்கன்று நடவு செய்தார். மேலும், 80 அடி சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தினையும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்



முன்னதாக, ஆணையாளர் வடக்கு மண்டலம் வார்டு எண் 14-க்கு உட்பட்ட துடியலூர் மீனாட்சி கார்டன் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வுகளின்போது உதவி ஆணையர்கள் கணேசன், மோகனசுந்தரி, செயற்பொறியாளர்கள் தேவதாஸ், ஜெகன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார்(பொ), சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர் சித்ரா, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், முருகன், உதவி பொறியாளர்கள் பிரகதீஸ்வரன், சக்திவேல், கோபிநாத், சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், ஜெயபார்வதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...