கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன. நான்கு பிரிவுகளில் 121 அணிகள் பங்கேற்றன. வெற்றியாளர்களுக்கு ரூபாய் 75,000 மதிப்பிலான பணப்பரிசு வழங்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் பிரிவு மாணவர்களின் சிந்தனைத்திறன், ஆய்வுநோக்கு மற்றும் புதுமையைக் கண்டடைகின்ற ஆர்வத்தை ஊக்குவிக்கின்ற நோக்கில், 'இன்னோவிஷன்-2026' அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன.




விழாவுக்கு, கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தலைமை வகித்தார். அவர் தனது உரையில், "மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன், திறன் மேம்பாட்டிலும் ஆர்வம் கொள்ளவேண்டும். திறன்மேம்பாடும், பரந்த ஆய்வு மனப்பாங்கும், சமுதாயப் பொறுப்புணர்வும், நாட்டின் அடிப்படைத் தேவைகள் முதலிய நிலையான இலக்குகளை அடைவதற்கு உதவ வேண்டும்" என்று வலியுறுத்தினார்.




இன்னோவிஷன் நிகழ்வின் நிறைவுச் சுற்றில், பிச்சதான் பிரிவில் 11 அணிகளும், ஐடியாத்தான் பிரிவில் 22 அணிகளும், ஹேக்கதான் பிரிவில் 45 அணிகளும், இன்னோவேத்தான் பிரிவில் 43 அணிகளும் என மொத்தம் 121 அணிகள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூபாய் 75,000 மதிப்பிலான பணப்பரிசு வழங்கப்பட்டது.




இன்னோவிஷன் - 2026 நிகழ்வானது முதன்மையர் வீ. இராகவி தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்வு மாணவர்களின் புதுமையான சிந்தனைகளையும், தொழில்நுட்ப திறன்களையும் வெளிப்படுத்தும் சிறந்த தளமாக அமைந்தது.


Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...