கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பீளமேடு, வைரவர் நகர், ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27க்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (21.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



வடக்கு மண்டலம் வார்டு எண் 27க்குட்பட்ட பீளமேடு, ரங்கம்மாள் கோவில் வீதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும், வைரவர் நகர் பகுதியில் சாலை செப்பனிடும் பணிகள் குறித்தும், ஆவாரம்பாளையம் சாலை, துரைசாமி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்தும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்வின்போது, மேயர் அலுவலர்களுக்கு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தாமதமின்றி நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.



முன்னதாக, மேயர் வார்டு எண் 26க்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள சிறுபாலத்தை அகலப்படுத்துவது மற்றும் அங்குள்ள மின்கம்பங்களை மாற்றியமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலம் அகலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், உதவி ஆணையர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் தேவதாஸ், செயற்பொறியாளர் உதவி சத்தியமூர்த்தி(பொ), மண்டல. சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர் குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

மேயர் K ரங்கநாயகி ராமச்சந்திரன், மழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து மழைநீர் வடிகால்களும் சரியாக செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நகரின் வடிகால் அமைப்பை சீரமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தேங்கும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்று தெரிவித்தார்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...