கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துணிக் கழிவுகளை குப்பையுடன் சேர்த்து கொட்டுவதையோ அல்லது எரிப்பதையோ தவிர்த்து, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தங்கள் வார்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கோவை:

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில், வீடுகளில் சேரும் துணிக் கழிவுகளை தனியாக சேகரித்து மறுசுழற்சி செய்யும் “மறு நெசவு” பிரச்சாரம் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டது.



ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு துணிக் கழிவுகளை தனியாகப் பிரித்தல், சேகரித்தல், கையாளுதல் மற்றும் மறுசுழற்சிக்கு அனுப்புதல் தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர், பிரச்சார வாகனங்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துணிக் கழிவுகளை குப்பையுடன் சேர்த்து கொட்டுவதையோ அல்லது எரிப்பதையோ தவிர்த்து, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தங்கள் வார்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் பொதுமக்கள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

பயன்படுத்தக்கூடிய பழைய ஆடைகள், துணிகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள் மற்றும் துண்டுகள் உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களையும், கிழிந்த அல்லது பயன்படுத்த முடியாத துணித்துண்டுகளையும் சேகரிப்பில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், படிப்படியாக மாநகராட்சியின் பிற மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும்துணிக் கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுடன் சேர்க்காமல் தனியாகப் பிரித்து, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மறுசுழற்சி செய்வதற்கான முன்னெடுப்பாக “மறு நெசவு” திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும், துணிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்றி மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் சரஸ்வதி, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ. தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் நர்மதா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர்கள், GIZ இந்தியா மற்றும் Grant Thornton Bharat LLP நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...