காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் 9597004936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு  பரிசோதனை மற்றும் ஆலோசனையும் வழங்கப்படும்.


கோவை: காய்ச்சல் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோய் பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை ஒருங்கிணைக்கவும் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள பொது சுகாதாரப் பிரிவில் செயல்படும் இந்த மையம், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மாநகராட்சி, ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மேற்கொள்ளப்படும் காய்ச்சல் தடுப்பு பணிகள் தினசரி கண்காணிக்கப்படுகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுவதுடன், உடல் வெப்பநிலை, அறிகுறிகள், நோய் ஏற்பட்ட காலம், பயண வரலாறு உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, தேவைக்கேற்ப மருத்துவர் பரிசோதனை மற்றும் ஆய்வகப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக, டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, லெப்டோஸ்பைரோசிஸ், டைபாய்டு மற்றும் இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட காய்ச்சல் தொடர்பான நோய்கள் குறித்து மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. தினசரி காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உடல்நிலை கண்காணிக்கப்படுவதுடன், சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.

அதிகமான காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்படும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் மற்றும் மருத்துவ முகாம்கள், தீவிர கண்காணிப்பு மற்றும் வீடு வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல், டெங்கு தடுப்பு நடவடிக்கையாக தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுதல், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், லார்வா கட்டுப்பாடு மற்றும் தேவையான இடங்களில் கொசு ஒழிப்பு மற்றும் புகைமருந்து தெளிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள், சந்தைகள், கட்டுமானப் பகுதிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுவதுடன், மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

காய்ச்சல் தொடர்பான மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கு 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை 9597004936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...