மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, அப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.53-க்கு உட்பட்ட மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் அகற்றி, பத்து வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையர் இன்று (03.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் நாவல், புளியமரம், வேம்பு, புங்கன், பூவன், வேங்கை, அத்தி, வாகை, அரசன் மற்றும் ஆலமரம் ஆகிய பத்து வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மீண்டும் குப்பைகள் கொட்டாமலிருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா அப்பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, இதேபோன்று மாநகராட்சிக்கு சொந்தமான பிற இடங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பணியாளர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் (பொ), மாமன்ற உறுப்பினர் மோகன், உதவி பொறியாளர் ஃபர்மான் அலி, சுகாதார ஆய்வாளர் சலைத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...