கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவானந்தா காலனி வரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பங்கேற்ற வண்ணமயமான ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.


கோவை:பட்டு உடைகள், மயிலிறகு கிரீடம் மற்றும் புல்லாங்குழலுடன் கிருஷ்ணர் வேடத்திலும், பாரம்பரிய அலங்காரங்களுடன் ராதை வேடத்திலும் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது.



இன்று, செப்டம்பர் 4, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோவையில்கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நடைபெற்ற வண்ணமயமான ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பங்கேற்றனர்.

ரத்தினபுரி பகுதியில் உள்ள சாஸ்திரி ரோட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மருதக்குட்டி வீதி, தயிரிட்டேரி வழியாக சிவானந்தா காலனியை சென்றடைந்தது. வழிநெடுகிலும் குட்டி கிருஷ்ண ராதை போல அலங்கரிக்கப்பட்ட குழந்தைகள் பக்தி கோஷங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர்.



ஊர்வலத்தைத் தொடர்ந்து,சிவானந்தா காலனியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணர் பாடல்கள் மற்றும் ஆன்மீக பக்திப் பாடல்களுக்கு குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

விழாவின் நிறைவில், ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு அமைப்பாளர்கள் சார்பில் சிறப்புப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

“குழந்தைகளிடம் ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் நோக்கம்”



நிகழ்ச்சியின்போது விஸ்வ ஹிந்து பரிஷத் தர்ம யாத்திரா தென் தமிழக அமைப்பாளர் சிவலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார், விஸ்வ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கோவையில் தொடர்ந்து 14-ஆவது ஆண்டாக கிருஷ்ண ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குழந்தைகளிடம் ஆன்மீக சிந்தனையை வளர்ப்பதுடன், மதமாற்றத்தைத் தடுப்பது, அன்பு, நல்லொழுக்கம் மற்றும் தீண்டாமையற்ற சமூகத்தை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த விழா நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய தலைவர் அசோக் சிங்காலின் 100-வது ஆண்டு விழாவும் இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், பள்ளிப் பருவத்திலேயே போதிய விழிப்புணர்வு இல்லாதது காரணமாக நாட்டில் பாலியல் குற்றங்கள் மற்றும் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆன்மீகத்தையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்கள் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விலகி, பெண்களை மதிக்கும் உயரிய எண்ணத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...