சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது கடமை என்றார். மத்திய சிறையில் உள்ள செக்கை பொதுமக்களுக்காக காட்சிப்படுத்த முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை மாசு குறித்து மக்கள் பக்கம் அரசு நிற்கும் என உறுதியளித்தார்.


Coimbatore: சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி தெரிந்துகொள்வது ஒவ்வொருவரின் கடமை என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.



வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது சிலைக்கு அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி மைதானத்தில் உள்ள சிதம்பரனார் சிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் Pawan Kumar Giriyappanar, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத்குமார், "நாட்டுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்துவது ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டான கடமை. ஒவ்வொரு தமிழரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் எவ்வாறு போராடினார்கள் என்பதை வரக்கூடிய தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை. அதனை நம்முடைய அரசு நிச்சயமாக செய்யும்" என்று தெரிவித்தார்.

கோவை மத்திய சிறைச்சாலை காரமடை பிளிச்சி பகுதிக்கு மாற்றப்பட உள்ளதால், தற்போது மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கினை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், கூடிய விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



மதுக்கரை தனியார் சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து அதிகளவு மாசு வெளியேறுவதால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு எடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, "அது குறித்து இன்னும் தகவல் கிடைக்கவில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் பக்கம்தான் நம்முடைய அரசு நிற்கும். எந்த இடத்திலும் மக்கள் போராடும் அளவிற்கு வைத்துக்கொள்ள மாட்டோம்" என்றார்.

"ஒவ்வொன்றிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டு வருகிறது. அனைத்தையும் முழுமையாக செயல்படுத்துவதற்கு காலநேரங்கள் தேவைப்படும். நிச்சயமாக சிமெண்ட் தொழிற்சாலை மூலம் மக்களுக்கும் அங்குள்ள பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம் அவர்கள் பக்கம்தான் நிற்போம்" என்று அமைச்சர் சம்பத்குமார் உறுதியளித்தார்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...