கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. TCS Chennai-ன் AI பிரிவு தலைவர் Ramkumar Venkataramani சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவு குறித்து உரையாற்றினார்.


Coimbatore: கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான 27-வது ஆண்டு முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான "YUVA 2026 – Freshmen Induction Programme Day - 1" வரவேற்பு நிகழ்ச்சி செப்டம்பர் 7, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. R. Vasanthakumar தலைமை வகித்தார். கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. B. Karthikeikumar முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு இறைவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கற்பகம் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் Dr. T. Prabhakaran வரவேற்புரையாற்றினார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர் Dr. S. Ravi தலைமை உரையாற்றினார்.


கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. B. Karthikeikumar மாணவர்களை வரவேற்று, கல்லூரியின் கல்விச் சூழல், மாணவர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (KIT) முதல்வர் Dr. B. Manimaran சிறப்பு விருந்தினரின் அறிமுக உரையாற்றினார்.


TCS – Chennai நிறுவனத்தின் AI Powered Quality Engineering & AI Evaluation பிரிவின் Strategic Solutions தலைவரான Ramkumar Venkataramani சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார். அவர் தமது உரையில் மாணவர்களிடம் செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் வழிகாட்டினார்.


கற்பகம் பொறியியல் கல்லூரியின் டீன் Dr. S. Sophia, துறைகளின் செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டுத் தலைவர்களை மாணவர்களுக்கு விரிவாக அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவாக சிவில் பொறியியல் துறைத் தலைவர் Dr. D. Rasi நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.


இந்த வரவேற்பு நிகழ்ச்சி, புதிய மாணவர்கள் கல்லூரிச் சூழலைப் புரிந்துகொண்டு, தங்களது கல்வி பயணத்தை நம்பிக்கையுடனும் சிறப்புடனும் தொடங்குவதற்கான சிறந்த தளமாக அமைந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் தங்களது எதிர்கால இலக்குகளை அடைவதற்கான ஊக்கமும் வழிகாட்டுதலும் பெற்றனர்.

Newsletter

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...