கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியில் திடீரென சிக்கிக்கொண்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். JCB இயந்திரம் மூலம் பேருந்து வெளியே எடுக்கப்பட்டது.
Coimbatore: கோவை மாநகராட்சி பகுதியான துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JCB இயந்திரத்தின் உதவியுடன் அதிரடியாக பேருந்து மீட்கப்பட்டது.
வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை தனியார் தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று அப்பகுதி வழியாக செல்லும்போது, சாலையில் தோண்டப்பட்டிருந்த பாதாள சாக்கடை குழி சரிவர மூடப்படாததால், எதிர்பாராத விதமாக பேருந்தின் சக்கரம் திடீரென குழிக்குள் சிக்கிக்கொண்டது.
பேருந்து ஒருபக்கமாக சாய்ந்ததால், உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்து குழிக்குள் சிக்கி நகர முடியாமல் தவிப்பதைக் கண்ட அப்பகுதி மக்களும், பிற வாகன ஓட்டிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் எவ்விதக் காயமுமின்றி பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக வரவழைக்கப்பட்ட JCB இயந்திரத்தின் உதவியோடு, குழிக்குள் புதைந்திருந்த பேருந்து மிகக் கவனமாக போராடி மீட்டு வெளியே கொண்டுவரப்பட்டது. மீட்பு நடவடிக்கையை பார்த்த அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் பல இடங்களில் சரியாக மூடப்படாமலும், பாதுகாப்பு தடுப்புகள் இன்றியும் விடப்படுவதால் தொடர் விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில், வடவள்ளி மருதமலை சாலையில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் குழிக்குள் விழுந்த சம்பவம் மறப்பதற்குள், தற்போது வெள்ளக்கிணறு பகுதியில் தொழிலாளர்கள் பயணித்த பேருந்தே குழிக்குள் சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் அனைத்து குழிகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணி நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், இரவு நேரங்களில் விளக்கு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.