வடவள்ளி, தில்லை நகர் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வடவள்ளி, தில்லை நகர் பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா செப்டம்பர் 21, 2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண்.38 வடவள்ளி பிரதான சாலையில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த அவர், வார்டு எண்.36 முல்லை நகர், சூப்பர் கார்டன் பகுதிகளில் குப்பை பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வார்டு எண்.33 கவுண்டம்பாளையம், ஜீவா நகரில் குப்பை மறுசுழற்சி பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வடவள்ளி, தில்லை நகர் பகுதியில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா செப்டம்பர் 21, 2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.38-க்குட்பட்ட வடவள்ளி பிரதான சாலையில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் தூய்மைப் பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் அப்பகுதியில் தூய்மைப் பணிகள் தொடர்பாக ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத் தொடர்ந்து, ஆணையாளர் வார்டு எண்.36-க்கு உட்பட்ட முல்லை நகர் மற்றும் சூப்பர் கார்டன் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், தில்லை நகர் டவர்லைன் கீழ் பகுதியில் உள்ள மாநகராட்சி இடத்தினை நில அளவை செய்து, மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், ஆணையாளர் வார்டு எண்.33-க்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகர் பகுதியில் உள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் நர்மதா, செயற்பொறியாளர் ஜெகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் விமலா, கார்த்திகேயன்(பொ), சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...

வடவள்ளி, தில்லை நகர் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வடவள்ளி, தில்லை நகர் பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக...

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...