கோவை மாநகராட்சியில் தடைசெய்யப்பட்ட 1,506 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1,37,250 அபராதமாக வசூல்

கோவை மாநகராட்சியில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த மே 27 முதல் ஜூன் 2 வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 676 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 1,506 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (மே 2) பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் கடந்த மே 27ம் தேதி முதல் இன்று மே 2 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிழக்கு மண்டலம், 37,56,57 மற்றும் 61-வது வார்டுக்குட்பட்ட திருச்சி ரோடு, காமராஜர் ரோடு, மசக்காளிப்பாளையம் ரோடு மற்றும் தண்ணீர்பந்தல் ரோடு ஆகிய பகுதியில் 154 கடைகளில் 62 கிலோவும், மேற்கு மண்டலம், 15, 16, 20, 21, 22, 23 மற்றும் 24-வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர், மருதமலை ரோடு உள்ளிட்ட பகுதியில் 87 கடைகளில் 105 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம், 28, 31, 38 மற்றும் 39-வது வார்டுக்குட்பட்ட துடியலூர் ரோடு, சத்தி ரோடு, காளப்பட்டி ரோடு, வி.கே.ரோடு மற்றும் ஆவாரம்பாளையம் ரோடு பகுதியில் 103 கடைகளில் 124 கிலோவும், தெற்கு மண்டலம், 87, 88, 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100-வது வார்டுக்குட்பட்ட போத்தனூர் ரோடு, குனியமுத்தூர் மற்றும் செட்டி வீதி ஆகிய பகுதியில் 140 கடைகளில் 167 கிலோவும், மத்திய மண்டலம், 25, 48, 51, 52, 53, 54, 74, 80, 81, 82, 83 மற்றும் 84-வது வார்டுக்குட்பட்ட ப்ளவர் மார்க்கெட், காளிங்கராயன் வீதி 100 அடி ரோடு, கிராஸ் கட் ரோடு, சுக்குவார்பேட், டவுன்ஹால் மற்றும் உக்கடம் பைபாஸ் ரோடு ஆகிய பகுதியில் 192 கடைகளில் 1048 கிலோவும் என மொத்தம் 676 கடைகளில் 1506 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தடையினை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததின் குற்றத்திற்காக பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களிடம் அபராதத் தொகையாக ரூ.1,37,250 விதிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று தெற்கு மண்டலத்தில் 85 வது வார்டு செட்டி தெருவில் பொது மக்களுக்கு இடையூராக சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடித்து அபராதமாக ரூ.1,000 விதிக்கப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...