இரட்டை இலை வழக்கில் தொடர்புடைய சுகேஷ் பாலாஜிக்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்- கோவை நீதிமன்றம் உத்தரவு


கோவையை சேர்ந்த தொழிலதிபரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கு தொடர்பாக இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் பாலாஜி இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவையை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேலு என்பவர் சமையலறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த 2010ம் ஆண்டு அவரை தொடர்பு கொண்ட சுரேஷ் பாலாஜி தனது பெயரை பிரகாஷ் என்று அறிமுகம் செய்ததோடு தாம் கர்னாடக அரசின் துணை செயலாளராக பணியாற்றி வருவதாகவும், அரசு நிறுவனங்களுக்கு உபகரணங்கள் பெற டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டெண்டர் பார்ம் உள்ளிட்டவைகளை அனுப்ப இரண்டரை லட்சம் ரூபாயை வங்கி மூலம் மாற்றம் செய்யுமாறும் கூறியுள்ளதார்.

இதனையடுத்து, ராஜவேலு அப்பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் மீண்டும் மூன்றரை லட்சம் ரூபாயை அனுப்புமாறு பிரகாஷ் கேட்டதால் சந்தேகமடைந்த ராஜவேலு, இது தொடர்பாக கர்னாடக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது, பிரகாஷ் என்பவர் அப்பதவியில் இல்லை எனவும் உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக எவ்விதமான டெண்டரும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜவேலு இது தொடர்பாக கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சந்திரசேகர், அவரது மகன் சுகேஷ் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கு கோவை இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிரிசனர்ஸ் டிரான்சிட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சுகேஷை இரயில் மூலம் கோவை அழைத்து வந்த போலீசார் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது சுகேஷை வருகிற 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சுகேஷை போலீசார் மீண்டும் இரயில் மூலம் டெல்லி அழைத்துச் சென்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...