தமிழகத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது சிபிஐ முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் பாஜகவின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இரு நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மத்திய அரசின் 3 ஆண்டு கால ஆட்சி, தமிழக அரசின் ஓராண்டு கால ஆட்சி, காவிரி நதிநீர் ஆணைய விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், வருகின்ற 29ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சார பேரியக்கம் நடத்தப்படும் எனவும் 6 பயணக்குழுக்களாக பிரிக்கப்பட்டு 1000 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு ஜூலை 5ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, யெச்சூரி தாக்கப்பட்டதற்கும், மத்திய பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முத்தரசன் தெரிவித்தார்.

மணல் கொள்ளையை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையை துரிதப்படுத்துவதோடு மணல் விலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டிய அவர், குண்டர் சட்டத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மாட்டு இறைச்சி விவகாரம் தொடர்பாக மாணவர் சூரஜை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கேரளாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதால் அங்கு மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் மோடியின் கைப்பாவை ஆட்சி நடைபெறுவதால் இங்கு ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது எனவும் முத்தரசன் தெரிவித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...