குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைக் கண்டித்து சுக்கரவார்பேட்டை பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார்

குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைக் கண்டித்தும், அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் சுக்கரவார்பேட்டை பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று முறையிட்டனர்.

கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை குடிக்க நேரிடும் சூழலால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மேலும், 2000-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

முன்னதாக, சுக்கரவார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதை எடுத்து வந்து, முறையாக குடிநீர் வழங்கவும், குடிநீர் பிரச்சனையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...