ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் சார்பில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்டர்னல் புகார் அமைப்பின் சார்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கே.வி.சுரேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவிதா ராஜகோபால் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "பெண்களின் முன்னேற்றத்தினைப் பொருத்தே சமூகத்தின் முன்னேற்றமும் அளவிடப்படுகின்றன" என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாசகத்தை நினைவுகூர்த்து உரையாற்றினார். 

தொடர்ந்து, பணியிடத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்புணர்வு குறித்தும், அதில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இன்டர்னல் புகார் அமைப்பின் (ஐசிசி) ரேனு தாமஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். ஐசிசி உறுப்பினர் மரியா யேசுராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவாக ஏ.விஜயசித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியினை ஐசிசி உறுப்பினர் பி.எஸ்.சாந்தினி ஒருங்கிணைத்து நடத்தினார். இதில், ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...