கோவையில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது



கோவை பழைய சுங்கம் குளத்து வாய்க்கால் வீதி கருணாநதி நகர் பகுதியில் வசிப்பவர் முன்னா (60). இவரது மனைவி ரமீஷா பேகம் (54). இவர்களுக்கு 3 மகன்கள் மட்டும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் முன்னா தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரமீஷா பேகம் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், முன்னா அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முன்னா-வை கைது செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, முன்னா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

கடந்த 4 வருடமாக எனது மனைவி என்னுடன் உடலுறவு கொள்ள மறுத்து வந்தார். மேலும், எனது உடலை பலகீனமாக்க அவர் எனக்குத் தெரியாமலேயே சில மருந்துகளை கொடுத்து வந்தார். எனவே, அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் என் மனைவி நேற்று இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு முன்னா கூறினார்.

தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...