கோவை மாநகரில் தலைக்கவசம் அணியாமல் செல்வதாக ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு: துணை ஆணையர் தகவல்

தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு அறிவித்தும் பலர் இந்த முறையை பின்பற்றாமல் இருக்கின்றனர். இதனால், சில நேரங்களில் உயிர்பலி ஏற்படுவது தவிர்கமுடியாததாகிறது.

என்னதான் காவல்துறையினர் வாகன தணிக்கை நடத்தி அபராதம் விதித்து வந்தாலும் இன்னும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களை கோவை மாநகர சாலைகளில் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதாக நாள் ஒன்றிற்கு ஆயிரம் வழக்குகள் பதியப்படுவதாக கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார்.



இது குறித்து துணை ஆணையர் துரை நமது சிம்ப்ளி சிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தலைக்கவசம் அணிவது குறித்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கோவை மாநகர போக்குவரத்து போலீசார் நடத்திவருகின்றனர். மேலும், ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்தி தலைகவசம் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் வசூலித்து வருகின்றனர்.

கோவையில் தற்போது 90 சதவிகித இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்கின்றனர். போலீசாரின் வாகன தணிக்கை மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகரில் நாள் ஒன்றிற்கு ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்:-

வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து நீதிமன்றம் மூலமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது அல்லது சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவகம் மூலம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

கோவை மாநகரில் கடந்த ஞாயிறு அன்று மட்டும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 175 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களுக்கும் சேர்த்து சராசரியாக 350 முதல் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...