கோவை மதுக்கரை அருகே உடல்நலம் குன்றிய நிலையில் சுற்றிதிரிந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


கோவை மதுக்கரையொட்டிய பகுதியில் தொடர்ச்சியாக யானையின் நடமாட்டம் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மதுக்கரை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் தள்ளாடிய நிலையில் சுற்றிய சிறுத்தையை கண்ட பொதுமக்கள்  வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்கானித்த கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே சிறுத்தை மயங்கி விழுந்தது.



இதனை அடுத்து, வனத்துறையினர் தண்ணீரில் நனைத்த துணியை கொண்டு சிறுத்தையை சுற்றி வனத்துறையினரின் வாகனம் மூலம் மதுக்கரை அடுத்துள்ள இந்திய கடற்படை வீரார்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.வனத்துறை மருத்துவர்களின் சிகிச்சைக்காக காத்திருந்த நிலையிலேயே சிறுத்தை உயிர் இழந்தது. 

நகரத்தையொட்டிய பகுதியான மதுக்கரையில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்துள்ளதும் அது மரணமடைந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அங்கு சென்று வனப்பாதுகாவலர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து வனத்துறை மருத்துவர் மனோகரன் சிறுத்தை இறந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...