தென் இந்திய மக்களின் இட்லி, தோசையை மறக்கடிக்கும் ஜிஎஸ்டி வரி- சிஐஐ கூட்டத்தில் கிரைன்டர் உற்பத்தியாளர்கள் வேதனை

தென் இந்திய மக்களின் பிரதான காலை உணவாக இடம்பெருவது இட்லியும், தோசையுமே. ஆனால் தற்போது அந்த உணவிற்கு மிகப்பெரிய அழிவு வந்துள்ளது. காரணம் கிரைன்டர் மீதான 17 முதல் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி உயர்வு. 



கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் சிஐஐ சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பங்கேற்று ஜிஎஸ்டி மீதான மக்களின் புரிதல் குறித்து விளக்கவுரையாற்றினார்.

இக்கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிரைன்டர் உற்பத்தியாளர்கள், ஜிஎஸ்டி உயர்வால் மக்களும், உற்பத்தியாளர்களும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினர்.



இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற உற்பத்தியாளர் குறைதீர் கூட்டத்தில், கிரைன்டர் உற்பத்தி மீது 17 முதல் 28 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 5 சதவிகிதம் மாநில அரசிற்கும், 12.12 சதவிகிதம் மத்திய அரசிற்கும் செல்கிறது என கூட்டத்தில் பங்கேற்ற உற்பத்தியாளர் அசோசியேஷன் உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், கோவையில் ஏராளமான கிரைன்டர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் கோவையிலேயே கிரைன்டர் உற்பத்தி அதிகளவில்  உள்ளது. இந்நிலையில், இந்த வரி உயர்வானது உற்பத்தி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது. எனவே, 17 முதல் 28 சதவிகித வரியினை 12 சதவிகிதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும், உற்பத்தியாளர்கள், தங்களின் உற்பத்தி தொடர்பான அனைத்துக் கோரிக்கைகளையும் வரும் ஆகஸ்ட் 4ம் தேதியன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி என்பது உற்பத்தியினை மட்டுமே சார்ந்தது அல்ல. கல்வி, மருத்துவம் என அனைத்தைம் மேம்படுத்தும் நோக்கில் உயர்த்தப்பட்டுள்ளது. 



மேலும், பிற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் ஜிஎஸ்டி வரியானது குறைவானதே என அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...