உதகையில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் அணிவகுப்பு பேரணி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் இன்று அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.



வரும் ஞாயிற்றுகிழமை உதகையில் ஸ்ரீவிநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோருடன் சுமார் 500 காவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி அசம்பளி திரையங்கம் அருகில் தொடங்கி சேரிங்கிராஸ், காபி அவுஸ் சதுக்கம், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதேப்போல் காந்தல் பகுதியிலும் அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது.



நாளை (ஆகஸ்ட் 25) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உதகை காமராஜர் அணையில் கரைப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணியாகவே தற்போது காவல்துறையின் அணிவகுப்பு நடைபெற்றது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...