கோவையில் நடைபெற்ற சேலம் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

சேலத்தில் அமைக்கப்பட உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கோவையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி சிறந்த ஊழியர்களுக்கான விருதுகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார் கூறியதாவது:-

"ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி பதிவு பெற்றுள்ளது. ஆனால் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 10 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டிற்குள் 20 லட்சம் நிறுவனங்களை இணைக்கவும் அதிகளவில் இத்திட்டத்தில் நிறுவனங்கள் இணைய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் ஆன்லைனில் இயங்கும் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த ஓராண்டில் அனைத்து வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களும் காகிதம் இல்லா அலுவலகங்களாக மாற்றப்படும்.

தொழிலாளர்களுக்காக உள்ள 38 சட்டங்களை ஒன்றிணைத்து அதனை 4 சட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக குழந்தை தொழிலாளர் சட்டங்களை முறைப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...