பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு- கோவையில் முடங்கிய கேரள பேருந்து சேவை

கேரளாவில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வைக் கண்டித்து, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை முதலே கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதன் காரணமாக, கோவை மாவட்டம், உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரளாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேசமயம் ஒரு சில கேரள அரசு பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை காலத்தில் திடீரென நடத்தப்படும் இதுபோன்ற முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்கள் விடுமுறைக்கு கேரளா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....