தினக்கூலி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்


2016-17 ஆண்டுக்கான முறைப்படியான போனஸ், சட்டப்படியான சம்பளம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்தப்பணியாளர், ஓட்டுநர், கிளீனர் கோயமுத்தூர் லேபர் யூனியன், தமிழநாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு & பொதுப்பணியாளர் சங்கம் மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா போன்ற அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



இதுகுறித்து பேசிய ஜனசக்தி மஸ்தூர் சபாவின் தலைவர் பழனிவேல் கூறியதாவது, "முறைப்படியான போனஸ், சட்டப்படியான சம்பளம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அக்.,19) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது திடீரென்று நடத்தப்படும் போராட்டம் அல்ல. சம்பள பிரச்சனை குறித்து பல முறை மனு கொடுத்தும் முறையான பதில் தரப்படவில்லை. இந்தநிலையில், மாநகராட்சி சார்பாக வெறும் ரூ.500, ரூ.1000 போனஸாக கொடுக்கப்பட்டது. இது சட்டப்படியான போனஸ் இல்லை. முறையான தொகை வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.



தீபாவளிப் பண்டிகை நேற்று முடிந்த நிலையில், தெருக்களில் குப்பைகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகள் அகற்றுப்படுவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....