திரைப்பட பாணியில் வயிற்றில் ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பதுக்கி வந்த வாலிபர் கைது

இலங்கையில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் வந்த பயணியின் வயிற்றில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



இலங்கையில் இருந்து கோவைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த விமானத்தில் பயணி ஒருவர் சட்டவிரோதமாக தங்கத்தை விழுங்கி எடுத்து வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியசீலன் என்ற பயணியை பிடித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் தங்கக் கட்டிகள் வயிற்றில் இருப்பது தெரிய வந்தது. 



இதைத் தொடர்ந்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு 20 சிறிய பாக்கெட்டுகளில் இருந்த தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. கடைசி ஒரு பாக்கெட்டை எடுக்க 8 மணி நேரம் ஆகியதாக சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.13 லட்சம் மதிப்புடையது என்றும், இது தொடர்பாக வாலிபர் சத்தியசீலனிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 



நடப்பாண்டில் மட்டும் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 12.145 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.3.69 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



போதைப்பொருட்கள், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை கடத்தல்காரர்கள் விழுங்கி, வயிற்றில் எடுத்து வரும் நிலையில், முதல்முறையாக தங்கத்தை எடுத்து வந்திருப்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...