கோவையில் வாலிபர் வெட்டிக்கொலை: போலீஸ் விசாரணை

கோவை அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (22). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளத்தூர் தட்டான் தோட்டம் என்ற பகுதியில் வாடகைக்கு குடியேறியுள்ளார். 

அவருடன் அவரது நண்பரும் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவருமான கரிகாலன் (31) என்பவரும் தங்கியிருந்தார். 

இந்த நிலையில், சேதுராமன் வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சுகுமார், சேதுராமனை பார்க்கச்சென்ற போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக சுகுமார், சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, சேதுராமன் தங்கி இருந்த அறையில் கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டது. மேலும், அவர் கொலை செய்யப்பட்ட போது ஒரு பெண் அறையில் இருந்து தப்பியோடியதாகவும் தெரிகிறது. 

எனவே பெண் தகராறில் சேதுராமன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் சேதுராமனுடன் உடனிருந்த கரிகாலனை தேடி வருகின்றனர். 

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...