50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளர் - மாவட்ட ஆட்சியர் தகவல்


கோவையில் 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளர் என்ற அடிப்படையில், வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழல் தடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பன்னீர்மடை ஊராட்சியில் இன்று (அக்.,24) ஒவ்வொரு வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் தெரிவிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின்படி, கோவை மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், டெங்கு காய்ச்சல் உண்டாவதற்குண்டான காரணிகளும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகின்றது. 



இயற்கைமுறையில் நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், நகர்புற பகுதிகளிலும், கிராமங்களிலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தொடர் கண்கானிப்பு மேற்கொள்ளுதல், 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளர் என்ற அடிப்படையில், வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழல் உள்ள இடங்களாக அறியப்படும், மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டிகள், திறந்த டிரம்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள், தேவையற்ற ஆட்டுக்கல் போன்றவற்றையும் கண்டறிந்து அப்புறப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும், பொதுமக்களுக்கு தங்களது வீடுகளை சுத்தமாகவும், ஏடிஸ் கொசுப்புழு வளரிடங்களை ஒழிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் சுகாதாரதம் காத்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். 

இவ்வாய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...