டெங்கு ஒழிப்பு பணியில் மாவட்ட ஆட்சியருடன் கல்லூரி மாணவர்கள்

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், தீத்திபாளையம் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் இன்று (அக்டோபர் 24 மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உடன் கல்லூரி மாணவர்கள் இணைந்து களப்பணியாற்றினர்.



அப்போது அவர் கூறுகையில், கோவை மாவட்ட நிர்வாகம் டெங்கு காயச்சல் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளர் என்ற அடிப்டையிலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளுக்கு ஒரு துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்களை நியமித்து தினந்தோறும் களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று தீத்திபாளையம் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் தீத்திபாளையத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டு தங்களுக்கு அளிக்கப்பட்ட படிவத்தின் அடிப்படையில் விவரங்களை சேமித்து மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்பிப்பர். அதனடிப்படையில், ஏடிஸ் கொசுப்புழு உருவாக காரணமாக உள்ள வீடுகளுக்கு அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்றே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தன்னார்வத்துடன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் அமைப்புகள் என அனைவரையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்று பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவர்கள் மூலம் விழிப்புணர்கள் ஏற்படுத்தும் போது, அவர்கள் சார்ந்த பகுதிகளில் தூய்மையடைவதோடு பொதுமக்களும் மாணவர்கள் கூறுவதை கேட்டு அதிகளவில் விழிப்படைகின்றனர். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது பேரூர் வட்டாட்சியர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பார்த்தீபன் உள்ளிட்ட உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...