பராமரிப்பு பணிகளுக்கு பிறகு பழங்கால என்ஜின் உதகை ரயில் நிலையத்தில் பொருத்தம்

உதகை ரயில் நிலையத்தில் சுமார் 96 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த பழங்கால ரயில் என்ஜின் பராமரிப்புப் பணிகளுக்கு மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டது.

ஆங்கிலேயர் காலமான 1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட x 37386 என்ற எண் கொண்ட ரயில் என்ஜின், 1921ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டு வந்தது.  கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - குன்னூர் மார்க்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த என்ஜினை, எண்ணெய் மூலம் இயக்கும் தன்மைக்கு மாற்றுவதற்காக திருச்சியில் உள்ள கோல்டன் ராக் ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள என்ஜினை, மக்களின் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில் முடிவு செய்தது. அதன்படி, அங்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், உதகை ரயில்நிலையத்தில் மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல, 1919-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரயில் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.  

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...