வால்பாறை பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி காளை மாடு பலி

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி காளை மாடு உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் சுரேஷ் என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை ஸ்டேன்மோர் குடியிருப்புப் பகுதியில் அவரது கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த சிறுத்தைபுலி ஒன்று காளை மாட்டை தாக்கிக் கொன்றது.

இதேப்போன்று நேற்று மாலை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி அங்கு வளர்ப்பு கோழிகளை வேட்டையாடிச்சென்றது. 

வால்பாறைக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தைப் புலிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் வனத்துறையினர் விரைந்து கூண்டு வைத்து அவற்றை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...