பணியின் போது மின்சாரம் தாக்கி கைகள் பாதிக்கப்பட்ட இளைஞர் உதவித்தொகை கோரி மனு

கோவை, அக்டோபர் 30-  பணியின் போது மின்சாரம் தாக்கியதால் இரு கைகளும் பாதிக்கப்பட்ட இளைஞர் செந்தில்குமார், இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார்.



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த சேது என்பவரின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளும் செயல் இழந்தன.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் கைகள் பாதிக்கப்பட்ட அவருக்கு 6 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த தொகையினை வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்க நீதிமன்றம் உத்திரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அவர் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன்-யிடம் தனது இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி இன்று செந்தில்குமார் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...